உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடக்கம்

0 738
உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடக்கம்

த்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கிய நிலையில் ஏராளமானோர் வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் மே 1 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. போதிய தடுப்பு மருந்துகள் இல்லாததால் முதலில் திட்டமிட்டபடி பல மாநிலங்களில் முகாம் தொடங்கப்படவில்லை.

தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து உத்தரப்பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி முகாம் தொடங்கியது.

நொய்டா, காசியாபாத் நகரங்களில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments