மிட்னாபூரில் மத்திய அமைச்சர் முரளீதரன் கார் மீது திரிணமூல் கொடியை ஏந்திய கிராம மக்கள் தாக்குதல்

0 1116
மிட்னாபூரில் மத்திய அமைச்சர் முரளீதரன் கார் மீது திரிணமூல் கொடியை ஏந்திய கிராம மக்கள் தாக்குதல்

மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் வெளியுறவு இணை அமைச்சர் முரளீதரன் சென்ற கார் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

பஞ்ச்குடி என்ற கிராமத்தில் அமைச்சரின் கார் சென்ற போது திரிணமூல் காங்கிரசின் கொடியை ஏந்திய அந்த கட்சியின் தொண்டர்கள் மரக்கட்டைகளாலும் கற்களாலும் அதை தாக்கினர்.

இந்த தாக்குதலில் அமைச்சர் முரளீதரனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தமது வாகன அணிவகுப்பில் ஒரு கார் முழுமையாக சேதமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரது காரின் கண்ணாடிகள் தாக்குதலில் உடைந்தன. தமது கார் தாக்கப்பட்ட காட்சிகளை அமைச்சரே பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடந்த கலவரங்களில் பாஜக தொண்டர் ஒருவர் கொல்லப்பட்ட இடத்திற்கு அமைச்சர் செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments