தென்காசி பட்டணத்தில் பூதமாக கிளம்பிய நடமாடும் நகைக்கடை..! ஆலங்குளம் அதிமுக வெற்றிக்கு உதவி

0 21735
தென்காசி பட்டணத்தில் பூதமாக கிளம்பிய நடமாடும் நகைக்கடை..! ஆலங்குளம் அதிமுக வெற்றிக்கு உதவி

லங்குளம் சட்டமன்ற தொகுதியில் கழுத்து நிறைய நகைகளுடன் வேடிக்கையாக வலம் வந்த பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் பெற்ற 37 ஆயிரம் வாக்குகளால் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 3600 வாக்குகளில், அதிமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ராக்கெட்ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் கழுத்து நிறைய நகைகளோடு, ஆலங்குளம் தொகுதியில் ஹெல்மெட் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட போது பத்தோடு ஒன்றாக வேடிக்கையாக பார்க்கப்பட்ட வேட்பாளர்..!

பிரச்சாரத்துக்கு சென்ற முதல் நாளே தான் அணிந்திருந்த நகைக்காக சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வரியாக கட்டி கெத்து காட்டியதால் பிரபலமானார். கூட்டணி அமைத்து போட்டியிடும் அதிமுக, திமுக என இரு ஜாம்பவான்களை களத்தில் எதிர்கொண்ட அவருக்கு டெபாசிட் கிடைக்குமா என்று விமர்சித்தவர்கள் உண்டு.

வாக்கு எண்ணிக்கையின்போது 5 வது சுற்றில் திமுக வேட்பாளரை 3 வது இடத்துக்கு தள்ளும் நிலைக்கு அவர் முன்னேறினார். அடுத்தடுத்த சுற்றுகளில் திமுக - அதிமுகவுக்கு இடையே தான் போட்டி என்பது உறுதியான நிலையில் ஒவ்வொரு சுற்றிலும் 1500 வாக்குகளுக்கு குறையாமல் பெற்றார் ஹரி.

இறுதியாக அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 73985 வாக்குகள் பெற்ற நிலையில் திமுக வேட்பாளர் பூங்கோதை 70380 வாக்குகள் மட்டுமே 3600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதே நேரத்தில் தென்காசி பட்டணத்தில் ஆலங்குளம் தொகுதி தேர்தலில் பூதமாக தோன்றிய ஹரி நாடார் 37632 வாக்குகள் பெற்று 3 வது இடத்துடன் டெபாசிட்டை காப்பாற்றிக் கொண்டார். இந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி , சமத்துவ மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்ப்பட்டது.

குறிப்பாக 2011 தேர்தலில் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற சரத்குமாரின் சமத்துவமக்கள் கட்சி இந்த தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments