மேற்கு வங்கம் - மம்தா 3ஆம் முறை முதல்வர்

0 6222

மேற்கு வங்க  சட்டப்பேரவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியை பெறுவது உறுதியான நிலையில், மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக அங்கு முதலமைச்சராகிறார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில பதிவான வாக்கு எண்ணிக்கை துவங்கியதும், திரிணமூல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. ஆனால் நேரம் செல்ல செல்ல தேர்தல் போட்டியில் திரிணமூல் காங்கிரஸ் முன்னேறி சென்றது. மாலை 5 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதில் 95 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பாஜக 74 தொகுதிகளில் முன்னிலை பெற்ற வேளையில், 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவையில் 294 இடங்கள் உள்ளன. ம ம்தா பானர்ஜி தாம் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒன்றான நந்தி கிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக முதலில் செய்தி வெளியானாலும் அவர் தோல்வி அடைந்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த தொகுதியில் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக மம்தா பானர்ஜியும் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளை தவிர காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்டவை எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments