தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு அமல்..! வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அனுமதி

0 3192
தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு அமல்..! வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அனுமதி

மிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 20-ம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்படி நேற்று இரவு 10 மணிக்குத் தொடங்கிய ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணி வரை நீடிக்கும். முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவோருக்கும், உணவு விநியோகத்தில் ஈடுபடுவோருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments