திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடந்த வசந்த உற்சவம் - உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனத்துடன் நிறைவு

0 626
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடந்த வசந்த உற்சவம் - உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனத்துடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வந்த வசந்த உற்சவம் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனத்துடன் நிறைவு பெற்றது.

உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா, கோதண்டராம சுவாமி, லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் மூலவர் சன்னதியில் இருந்து தங்க வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளும், ஆஸ்தானமும் நடந்தது.

அதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க ஸ்நாபன திருமஞ்சனம் செய்து நைவேத்தியம் சமர்பித்தனர். பெளர்ணமியையொட்டி இன்று இரவு 7 மணியளவில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments