சென்னையில் இளம் வயதினரே கொரோனாவால் அதிகம் பாதிப்பு

0 44606

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 30 வயது முதல் 39 வயது வரையுள்ளவர்களே அதிகம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

மாநகராட்சி தெரிவித்துள்ள விவரங்களின்படி, கொரோனா நோயாளிகளில் 22 விழுக்காட்டினர் 30 வயது முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்கள் 20 விழுக்காடு உள்ளனர். பணி மற்றும் பிற தேவைகளுக்காக அதிகம் வெளியே செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் இந்த வயதினர் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவது இயல்பு தான் என்றாலும் கூடுதல் கவனத்துடன் இருக்க வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

40 முதல் 49 வயது வரையுள்ளோர் 18 விழுக்காடும், 50 வயது முதல் 59 வயது வரையுள்ளோர் 16 விழுக்காட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர் தேவையின்றி வெளியில் செல்வதில்லை என்பதால் மற்ற பிரிவுகளை ஒப்பிடுகையில் இந்த பிரிவில் கொரோனா நோயாளிகளின்  எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments