வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

0 3149

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி உட்பட தென் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 90% வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

இதன் காரணமாக இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் எனக் கூறியுள்ள வானிலை மையம், தேவைக்கேற்ப நீர்சத்து மிகுந்த காய்கறிகள், பழவகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும், வெள்ளை மற்றும் வெளிறிய வண்ண கதர் ஆடைகளை அணியவும் அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments