டெல்லியை தொடர்ந்து நொய்டா மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு

0 891

கொரோனா தொற்று அதிகரித்து நோயாளிகளின் வருகையும் பலமடங்கு உயர்ந்து வருவதால், டெல்லியை தொடர்ந்து நொய்டாவிலும் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு உருவாகி உள்ளது.

நொய்டாவில் உள்ள சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் 12 மணி நேரத்தில் இரண்டு முறை ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நொய்டா அமைந்துள்ள கவுதம் புத்தா மாவட்டத்தில் தினமும் 60 டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் 30 டன் மட்டுமே கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை அடுத்து ஆக்சிஜன் விநியோகத்தை முறைப்படுத்த அங்குள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உ.பி. அரசு கண்காணிப்பை வலுப்படுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் இரவுபகலாக ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை கண்காணிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments