தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது -ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

0 63124
தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது -ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

மிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, ஆம்னி பேருந்துகளின் சேவையை நாளை முதல் நிறுத்தி வைக்க அனைத்திந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கோயம்பேட்டில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அந்த சங்கத்தின் தலைவர் பாண்டியன் இதனை தெரிவித்தார்.

பகலில் பேருந்துகளை இயக்குவதால் பலன் இல்லை என்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு அந்தந்த பேருந்துகளின் உரிமையாளர்கள்  டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்குவார்கள் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments