தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

0 1190

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்துக்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசி தேவை என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் ஆணையருக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவதாகவும், 4 ஆயிரத்து 795 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி திருவிழா வை ஒட்டி அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

வருகிற 25-ந்தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதால், 10 நாட்களுக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்கும் வகையில், 15 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 5 லட்சம் டோஸ் கோவேக்சின் என 20 லட்சம் டோஸ் தடுப்பு மருந்தை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வவிநாயகம், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளதாகவும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments