சட்டீஸ்கரில் அதிகரிக்கும் கொரோனா... உயிரிழந்தோர் உடல்களை குப்பை வண்டியில் ஏற்றிச் செல்லும் அவலம்

0 3194

சட்டிஸ்கரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ராஜ்நந்த் கான் எனுமிடத்தில் உயிரிழந்தோரின் உடல்களை மயானம் வரை கொண்டு செல்ல குப்பை அள்ளும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு குப்பை வண்டியில் நான்கு நகராட்சி ஊழியர்கள் கவச ஆடை அணிந்து சடலங்களை ஏற்றிச் சென்றதும், மயானத்தில் அவற்றை அடக்கம் செய்வதுமான காட்சிகள் வெளியாகி அங்குள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளன.

இது குறித்த கேள்வி எழுந்த போது, சடலங்களை எடுத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்வது நகரப் பஞ்சாயத்தின் பொறுப்பு என்று தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments