ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்கு 2-வது வெற்றி: 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது

0 3483
ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணிக்கு 2-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைன் மேக்ஸ்வெல் 59 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் 54 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் போட்டு கொடுத்தார். இருப்பினும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments