திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வு.. பீதி அடைந்த மக்கள் வீட்டை விட்டு ஓட்டம்

0 4821
திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குரிசிலாப்பட்டு, கந்திலி, நாட்றம்பள்ளி, அச்சமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 8.40 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

அந்த அதிர்வு பலத்த சத்தத்துடன் செல்போன் வைப்ரேசன் அதிர்வுகள் போன்று இருந்ததாக  பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். மேலும்  பயங்கர சத்தம் கேட்டதால் பீதி அடைந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ விளக்கமும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments