சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்

0 1791
சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம்

சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 44 இருக்கைகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் சிரமமின்றிப் பயணிக்க ஏதுவாக, இன்று முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் அதிகம் பயணிக்கின்ற பகுதிகளிலிருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments