ரயில் சேவைகள் நிறுத்துவது பற்றி எந்தவொரு திட்டமும் இல்லை - ரயில்வே வாரியத்தின் தலைவர்

0 1049
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், ரயில் சேவைகள் நிறுத்துவது பற்றி எந்தவொரு திட்டமும் இல்லை என ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனித் சர்மா தெரிவித்திருக்கிறார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், ரயில் சேவைகள் நிறுத்துவது பற்றி எந்தவொரு திட்டமும் இல்லை என ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனித் சர்மா தெரிவித்திருக்கிறார்.

பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களும் இயக்கப்படும் என்றும், நடப்பு மாதமும், வருகிற மே மாதமும் கூடுதலாக சுமார் 120 ரயில்களை இயக்கி, கூட்ட நெரிசலை முற்றாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில், நாளொன்றுக்கு 1400 அதிவிரைவு ரயில்களும், 5,300 புறநகர் ரயில்களும், 800 பயணிகள் ரயில்களும் இயக்கப்படுவதாகவும், மாநில அரசுகள் கோரினால், கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments