ஈரானால் கைப்பற்றப்பட்ட தென்கொரிய கப்பலும், அதன் கேப்டனும் விடுவிப்பு

0 1275

ஈரானால் கைப்பற்றப்பட்ட தென் கொரிய கப்பல் மற்றும் அதன் கேப்டன் விடுவிக்கப்பட்டனர்.

பெர்சியா வளைகுடாப் பகுதியில் ரசாயன நச்சையும் சுற்றுச்சூழல் நாசத்தையும் ஏற்படுத்துவதாகக் கூறி, தென் கொரியாவின் ரசாயன டேங்கர் கொண்ட கப்பலை கடந்த ஜனவரி மாதம் ஈரான் சிறை பிடித்தது.

தென்கொரியாவின் தொடர் அழுத்தத்தை தொடர்ந்து கேப்டனை தவிர கப்பலிருந்த மற்ற 19 பணியாளர்களையும் கடந்த  பிப்ரவரி மாதம் ஈரான் விடுவித்தது.

இந்நிலையில் தற்போது கப்பலும், அதன் கேப்டனும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments