மகாராஷ்ட்ரா, கேரளா, பஞ்சாப்பில் இருந்து பெங்களூரு செல்வோருக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்

0 1257

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, பெங்களூருவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது என்றார்.  கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மராட்டியம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் காட்ட வேண்டும் என்ற அவர், தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments