ஒரு முறை அவளைக் கட்டி தழுவிக் கொள்ளட்டுமா?...விபத்தில் இறந்த மகளைக் கண்டு பரிதவித்த தந்தை

0 6015

சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு தைவானின் ஹுவாலியென் பகுதியில் பயங்கரமான ரயில் விபத்து ஒன்று நடந்தது . அதில், அந்த ரயிலில் பயணம் செய்த 50 பேர் பலியாகினர். மேலும், 200 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகே கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வந்ததாகவும், அங்கிருந்த லாரி ஒன்று பார்க் செய்த இடத்திலிருந்து நழுவி தண்டவாளத்தில் வந்து நின்றதால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது .

இந்நிலையில், விபத்தில் இறந்தவர்கள் பற்றி வெளியாகவும் செய்திகள் சில கேட்போரை சோக கடலில் ஆழ்த்துகிறது.

அந்த வகையில், மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த டாமோ லீ எனும் நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தந்தையைப் பற்றிய உருக்கமான நிகழ்வு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

யாங் என்ற நபர், தனது விடுமுறையை குடும்பத்துடன் கழிப்பதற்காக டைதுங் நகரத்திற்குச் டாரோகோ எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தார். உடன் தன் இரண்டு மகள்களை அழைத்துக் கொண்டு சென்றார். யாங்கின் இளைய மகளின் பெயர் யாங் சி-சென். அவளுக்கு வயது 6.

திடீரென எதிர்பாராத விதமாக ரயில் விபத்துக்குள்ளாக , விபத்தில் சிக்கி கண் விழித்துப் பார்த்த யாங்கை, மீட்புப் பணியாளர் ஒருவர் தன் பின்னால் சுமந்தபடி சென்றுகொண்டிருந்தார். அப்போது யாங் என் மகள்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மீட்புப் பணியில் இருந்தவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார். மீட்டப் பணி வீரரும் , கண்டிப்பாக உதவி செய்வதாகக் கூறினார்.

இதனை தொடர்ந்து , இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த 6 வயது சிறுமியின் சடலம் ஒன்றை மீட்புப் பணியிலிருந்தவர்கள் கண்டெடுத்தனர். பின்னர் அது யாங்கின் மகள் யாங் சி-சென் என்று தெரியவந்தது . மகளைச் சடலமாகப் பார்த்த யாங் பரிதவித்துப் போனார். ஒரு முறை நான் அவளைக் கட்டித்தழுவலாமா என்று அவர் கேட்க,பணியாளர்கள் யாங் சி-சென்னின் உடலை அவர் கையில் தந்தனர் . இறந்துபோன தன் மகளைக் கட்டி தழுவி அழுத்தத் தந்தையைப் பார்த்துச் சுற்றி இருந்த அனைவரும் கண் கலங்கி நின்றனர்.

இந்த தந்தையின் கதை சமூக வலைத்தளங்களில் தற்போது பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments