நியூசிலாந்து காவல்துறையில் கால் தடம் பதிக்கும் இந்திய வம்சாவளி பெண்..!

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் நியூசிலாந்து நாட்டின் காவல்துறையின் உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பாவட்டத்தை சேர்ந்த மந்தீப் கவுர் தனது குழந்தை பருத்துவத்திலேயே நியூசிலாந்து நாட்டிற்கு பெற்றோருடன் குடியுயேறியுள்ளார். பின்னர் சில காலம் நியூசிலாந்தில் செலவழித்த கவுர் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவில் இருந்துள்ளார். தனது 26ம் ஆண்டு மீண்டும் நியூசிலாந்திற்கு திரும்பிய கவுர் 2004ம் ஆண்டு அந்நாட்டின் காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். கலாச்சாரம் மற்றும் தனிட்டப்பட்ட முறையிலான விமர்சனங்களை எதிர்கொண்ட கவுர் இன்று இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மந்தீப் கவுரை நியூசிலாந்தின் உயர் போலீஸ் அதிகாரியாக பதவி உயர்வு செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. நியூசிலாந்து காவல்துறையில் வலிமைமிக்க ஒரு போலீஸ் அதிகாரியாக வலம் வரும் கவுர் தற்பொழுது வில்லிங்டனில் உயர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
முன்னதாக காவல்துறையில் சேர்ந்ததும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளையும், பாதுகாப்பு வழங்கும் அதிகாரியாகவும், தனிப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் அவரது சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் விதமாக காவல்துறையின் உயர் அதிகாரியாக பதவி உயர்வு அளித்து நியூசிலாந்து அரசு உத்தரவிட்டது. இந்தியாவில் இருந்து நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்து அந்நாட்டின் சிறப்பு மிக்க காவல்துறை அதிகாரியாக வலம் வரும் கவுர் தனது சுய சரிதையை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் பிறந்து நியூசிலாந்தில் குடிப்பெயர்ந்து அந்நாட்டு அரசின் உயர் அதிகாரியாக மாறும் வரை தான் எதிர்கொண்ட பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளார்.
Comments