நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு

நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தின் அனைத்து நாட்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும்: மத்திய அரசு
ஏப்ரல் மாதம் முழுவதும் விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில், தொடர்ந்து அதிகரித்து வரும் பெருந்தொற்றை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் விடுமுறை நாட்கள் உள்பட தடுப்பூசி போடப்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும்படியும் மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments