ரஷ்யாவின் ஸ்புட்னிக் V மருந்துக்கு மத்திய அரசு தடை : மருந்து தொடர்பான கூடுதல் தகவல்களைத் தராததால் நடவடிக்கை

0 887
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V மருந்துக்கு மத்திய அரசு தடை : மருந்து தொடர்பான கூடுதல் தகவல்களைத் தராததால் நடவடிக்கை

கொரோனா தடுப்பு மருந்தான ரஷ்யாவின் ஸ்புட்னிக் V க்கு அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது.

ஸ்புட்னிக் மருந்தை ரஷ்யாவில் உள்ள கமலேயா தொற்று நோயியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இதனை ஆயிரத்து 300 பேரிடம் சோதனை செய்தது.

இந்நிலையில் ஸ்புட்னிக் மருந்து தொடர்பான தகவல்களைத் தருமாறு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டது.

ஆனால் இதுவரை தகவல் அளிக்காததாலும், ஸ்புட்னிக் மருந்தை மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாப்பது உகந்ததல்ல என்பதாலும் அந்த மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments