தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 11027
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய அவர், சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றார்.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறிய ராதாகிருஷ்ணன், ஒருவேளை கொரோனா பாதிப்பு அதிகரித்தால், அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு மட்டும் படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments