தாராபுரத்தில் 30 ஆம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

0 1489

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு பிரதமர் மோடி பிரசாரத்திற்காக வர உள்ளதை ஒட்டி, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த  தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற 30-ந்தேதி பிரசாரம் செய்கிறார். இதற்காக தாராபுரம் உடுமலை செல்லும் சாலையில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் பந்தல் மற்றும் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி, ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி தாராபுரம் நகர் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments