ஆர்லியன்ஸ் பேட்மிண்டன் மாஸ்டர் தொடரில் அமெரிக்க வீராங்கனையை வென்று சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

0 3556
ஆர்லியன்ஸ் பேட்மிண்டன் மாஸ்டர் தொடரில் அமெரிக்க வீராங்கனையை வென்று சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

பிரான்சில் நடந்து வரும் ஆர்லியன்ஸ் பேட்மிண்டன் மாஸ்டர்ஸ் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

கால்இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஐரிஸ் வாங்கை அவர் எதிர்கொண்டார். இதில் 21-க்கு 19, 17-க்கு 21, 21-க்கு 19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாய்னா வெற்றி பெற்றார்.

ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 19-க்கு 21, 17-க்கு 21 என்ற செட் கணக்கில் பிரஞ்சு வீரர் டோமா ஜூனியரிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments