பிரேமலதாவை கொரோனா பரிசோதனைக்கு அழைத்த சுகாதாரத்துறை அதிகாரிகள்: வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்

0 2507

தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அவரது சகோதரியும் விருத்தாச்சலம் தேமுதிக வேட்பாளளுமான பிரேமலதா விஜயகாந்தை சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைக்கு அழைத்த நிலையில், தேமுதிகவினர் சுகாதாரத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாச்சலம் தொகுதிக்குட்பட்ட எம்.ஆர்.கே. நகர் பீங்கான் தொழிற்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த பிரேமலதாவை சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைக்கு வரும் படி அழைத்தனர்.

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தற்போது வர இயலாது என கூறிய பிரேமலதா மாலையில் வருவதாக கூறினார். இதனிடையே பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதற்காகவே இதுபோன்று செய்வதாக கூறி சுகாதாரத்துறையினருடன் தேமுதிகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments