மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே இடையே தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு நாளை கையொப்பமாகும் எனத் தகவல்

மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே இடையே தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு நாளை கையொப்பமாகும் எனத் தகவல்
மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கை நாளை திங்கட்கிழமை கையொப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்திய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன், துணைப் பொதுச்செயலாளர் ரவிபாபு ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்குச் சென்றனர். அவர்கள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச்சு நடத்தினர்.
எஸ்டிபிஐ கட்சியுடனும் பேச்சு நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர். இந்தக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு உடன்பாடு திங்கட்கிழமை கையொப்பமாகும் எனக் கூறப்படுகிறது.
Comments