மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

0 792
மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

ட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோவின் Jalisco மாநிலத்தில், குடியிருப்பு பகுதிக்குள் காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில், 10 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில், Jalisco மாநிலத்தின் தலைநகரான Guadalajara பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments