இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!

இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சில் 81 ரன்களில் சுருண்டது.
49 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்தியா, விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டி, இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
Comments