கண்ணில் விரலை விட்டு ஒரே குத்து... சிறுவன் நடத்திய கவுன்டர் அட்டாக்கால் தப்பி ஓடிய சிறுத்தைபுலி!

0 31424
சிறுத்தையை விரட்டியடித்த நந்தன்

மைசூரு அருகே தன்னை தாக்க வந்த புலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டி சமயோசிதமாக தப்பித்த சிறுவன் பற்றிதான் கர்நாடக மக்கள் பேசி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள கடகோலா அருகேயுள்ள பீரஹோவதானஹண்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் நந்தன்.சிறுவனின் வீட்டையொட்டி 140 ஏக்கர் பரப்பளவில் கர்நாடக மின்வாரியத்துக்கு சொந்தமான மிகப் பெரிய காலி நிலம் உள்ளது. புதர் நிறைந்த இந்த பகுதியில் சிறுத்தைப்புலிகள் பதுங்கியிருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், சிறுவன் நந்தன் தன் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு உணவு வைத்து கொண்டிருந்தான். அப்போது, சிறுவனின் தந்தை ரவியுடன் உடனிருந்துள்ளார். அப்பேது, அந்த பகுதியில் திடீரென்று வந்த சிறுத்தைபுலி ஒன்று சிறுவன் நந்தன் மீது பாய்ந்து தாக்க முயற்சித்துள்ளது. இதை கண்டு சிறுவனின் தந்தை ரவியும்  செய்வதறியாது திகைத்து நின்றார். ஆனால், சிறுத்தை புலி தன்னை தாக்கிய தருணத்திலும் தைரியத்தை இழந்து விடாத, நந்தன் தன் புத்தியை பயன்படுத்தினான். எங்கே தாக்கினால் , சிறுத்தை புலி திணறும் என்று சரியாக கணித்தான்.

தொடர்ந்து, சிறுத்தைப் புலியின் கண்களின் தன் விரல்களை விட்டு ஆட்டினான்.  இந்த கவுன்டர் அட்டாக்கை சற்றும் எதிர்பார்க்காத சிறுத்தைப்புலி சிறுவன் நந்தனை விட்டு விட்டு காட்டுக்கு ஓடி மறைந்தது. சிறுத்தைப்புலி தாக்குதலில் நந்தனின் தோள்பட்டை, கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர், மைசூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் நந்தன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுத்தையிடத்தில் இருந்து சமயோசிததாக தப்பித்த சிறுவனை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

இந்த சம்பவத்தையடுத்து கடகோலா சுற்றுவட்டார கிராம மக்கள் கர்நாடக மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இது குறித்து மண்டல வனத்துறை அதிகாரி கிரிஷ் கூறுகையில், '' பொதுவாக மனிதர்களை சிறுத்தைபுலிகள் தாக்குவதில்லை. முதன்முறையாக சிறுவனை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறுப்படுகிறது. சிறுவன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும், சிறுவன் சிறுத்தை புலியின் கண்களில் விரலை விட்டு குத்தியது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments