உருமாற்ற கொரோனா பரவல் : மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 2485

ருமாற்றம் பெற்ற கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. உருமாறிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் விளக்கத்தை பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, புதிய வகை கொரோனாவின் தாக்கம் ஆந்திராவின் அமராவதி, மகாராஷ்டிராவின் அகோலாவில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது நம் எல்லையிலிருந்து வெகு தொலைவில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது. 

குடிமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments