காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 1841
காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

7 மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவிரி - வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நாளை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு திட்டமான இதற்கு  முதற்கட்டமாக 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் புதுக்கோட்டை திருச்சி கரூர் சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 ஆயிரம் ஹெக்டேர்  பாசன நிலங்கள் பயன்பெறும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments