திருச்சி தனியார் தோட்டத்தில் இறந்துகிடந்த 22 மயில்கள் -வனத்துறை விசாரணை

0 3593
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த 22 மயில்களின் உடல்களை மீட்டு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்த 22 மயில்களின் உடல்களை மீட்டு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கீழபொய்கைப்பட்டியைச் சேர்ந்த ராசு என்பவரது தோட்டத்தில் மயில்கள் இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

மொத்தம் 6 ஆண் மயில்கள், 16 பெண் மயில்கள் என 22 மயில்களின் உடல்களை வனத்துறையினர் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தோட்டத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள நிலையில், விலங்குகள் நுழையாமல் இருக்க சுருக்குக் கண்ணிகள், விஷ உணவுகள் வைத்திருந்ததற்கான தடயங்கள் கிடைத்ததாக வனத்துறையினர் கூறுகின்றனர்.

ராசு தலைமறைவாகவுள்ள நிலையில் அவரது மனைவி சின்னப்பொண்ணுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments