உத்தரகாண்ட்டில் 11வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணிகள்: 56 உடல்கள் மீட்பு; காணாமல் போன 150க்கும் மேற்பட்டோரை மீட்க கடும் முயற்சி

0 994

த்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 11-வது நாளாக இன்று தொடர்கிறது.

சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால், இரு ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கரையோர வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த நீர்மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.தேசிய அனல்மின் கழகத்துக்கு சொந்தமான தபோவன்-விஷ்ணுகாட் சுரங்கத்தில் சேறும், இடிபாடுகளும் குவிந்ததால், உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 35 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்க கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இந்தோ-திபெத் எல்லை படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் போராடி வருகிறார்கள்.

அவர்கள் மின்திட்ட பகுதியில் இருந்து மேலும் 4 உடல்களை மீட்டனர். இதனுடன் பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து விட்டது. இன்னும் 150-க்கு மேற்பட்டோரை காணவில்லை. சுரங்கத்திலும் தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments