மேற்குவங்கத்தில் பாஜக பிரமுகர் கார் மீது கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல்

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக பிரமுகர் ஃபெரோசி கமல் காசி சென்ற கார் மீது அடையாளம் தெரியாத சிலர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வடக்கு 24 பரகனாஸ் பகுதியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு கொல்கத்தா திரும்பிக் கொண்டிருந்த போது அவருடைய கார் மீது கையெறி குண்டுகள் வீசப்பட்டன.
திரிணாமூல் காங்கிரசில் இருந்து அண்மையில்தான் அவர் பாஜகவில் இணைந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Comments