இது வரை இந்தியா ரூ.338 கோடி மதிப்புக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

இது வரை இந்தியா ரூ.338 கோடி மதிப்புக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
இதுவரை 338 கோடி ரூபாய் மதிப்பிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதைத் தெரிவித்த அவர், கடந்த மாதம் முதல் இந்தியா கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்து வருவதாக கூறினார். நட்பு நாடுகளுக்கான இலவச தடுப்பூசி மற்றும் வர்த்தக அடிப்படையிலான தடுப்பூசி ஏற்றுமதி ஆகியன இதில் அடங்கும் என்றார் அவர்.
சீரம் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் 62 லட்சத்து 70 ஆயிரம் டோசுகள், 125.4 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப்பட்டு நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
ஒரு கோடியே 5 ஆயிரம் டோசுகளை வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்ததில் 213.32 கோடி கிடைத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments