சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு... 20-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

0 2186
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு... 20-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ள நிலையில், ஆலை உரிமையாளர், குத்தகைதாரர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில், ஒரு அறையில் வெடிகளுக்கான மருந்தை உட்செலுத்தும் போது உராய்வு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 15-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரை மட்டமாகின.

இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சாத்தூர், சிவகாசி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது. ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தைகைதாரர் சக்திவேல் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதோடு 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments