ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் உருவான பயங்கர நிலநடுக்கம்; கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

0 5336
ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் உருவான பயங்கர நிலநடுக்கம்; கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!

ஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் நேரிட்டது. நியுசிலாந்து , ஆஸ்திரேலியா மற்றும் அந்நாடுகளைச் சுற்றியுள்ள குட்டித் தீவுகளை இந்த பயங்கர நிலநடுக்கம் அதிர வைத்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளி 7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதாக ஆஸ்திரேலிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பெரிதாக இருந்ததால் முன்னெச்சரிக்கையாக கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பிஜி, நியுசிலாந்து உள்ளிட்ட கடல் பகுதிகளில் அலைகள் அதிக அளவில் இருந்ததாகவும் சுமார் மூன்றரை அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலுக்கு அடியில் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் நிலப்பரப்பில் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments