கண்டெய்னர் லாரியை இடதுபுறமாகச் சென்று முந்த முயற்சி.. இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த பெண் பலி

0 2738
திருப்பூரில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை இடதுபுறமாக முந்த முயன்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருப்பூரில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை இடதுபுறமாக முந்த முயன்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியானார் .

முருகம்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி - அருக்காணி தம்பதி நேற்றிரவு பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

கோடீஸ்வரர் சந்திப்பு என்ற இடத்தின் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை வேலுச்சாமி இடதுபுறமாக முந்த முயன்றார்.

அப்போது, எதிர்பக்கமிருந்து நடந்து வந்த நபர் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறி இருவருமே கீழே விழ, கண்டெய்னர் லாரியின் சக்கரம் அருக்காணி மீது ஏறி இறங்கியது.

இந்த கோர விபத்தில் அருக்காணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, காயங்களுடன் வேலுச்சாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments