ஹாட்ரிக் வெற்றி அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் - கனிமொழி

0 1273
ஹாட்ரிக் வெற்றி அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

ஹாட்ரிக் வெற்றி அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில், மதுரையில், 2-வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், செல்லூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் கனிமொழி தெரிவித்தார்.  

அதிமுகவிற்கு இந்த தேர்தல் ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என அமைச்சர்கள் கூறி வருவது குறித்த கேள்விக்கு ஹாட்ரிக் வெற்றி அதிமுகவின் கனவாக மட்டுமே இருக்கும் என்றும் மக்களின் மனநிலை ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments