3வது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை பிப்.12ல் தொடங்க உள்ளேன் - மு.க.ஸ்டாலின்

இரண்டு கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்து மூன்றாவது கட்ட பிரச்சாரத்தை வரும் 12ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்பதை மக்கள் எழுச்சி மூலம் தான் உணர்வதாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை நடத்தி வைத்து உரையாற்றிய அவர், 3 மாதங்களில் திமுக ஆட்சி என்பதை ஆணவத்தில் சொல்லவில்லை என்றும், மக்கள் எழுச்சி மூலம் தாம் கண்கூடாகப் பார்க்கும் உண்மை என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Comments