விவசாயிகளுக்கு ஆதரவான கிரேட்டாவின் பதிவு பற்றிக் கருத்துக் கூற சுவீடன் அரசு மறுப்பு

0 1634

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கிரேட்டா தன்பர்க் பதிவிட்டது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க சுவீடன் அரசு மறுத்துவிட்டது.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவீடனைச் சேர்ந்த காலநிலைச் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் டுவிட்டரில் பதிவிட்டார்.

இதனாலும் பாடகி ரிகானாவின் பதிவாலும் விவசாயிகளின் போராட்டம் உலகளாவிய கவனம் பெற்றது.

இந்நிலையில் கிரேட்டா தன்பர்க்கின் பதிவு குறித்து சுவீடன் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளிடம் செய்தி நிறுவனம் கருத்துக் கேட்ட போது அதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments