செவ்வாய் கோளில் இருந்து சிக்னல்களை பெற சீனா உருவாக்கிய பிரம்மாண்ட ஆண்டெனா

0 4069

செவ்வாய் கோளில் இருந்து சிக்னல்களை பெறுவதற்காக, 10 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரிய, 2700 டன் எடை கொண்ட, ராட்சத ஆண்டெனாவை சீனா உருவாக்கியுள்ளது.

செவ்வாய் கோளுக்கு ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய மூன்றையும் தியான்வென்-1 (Tianwen-1) என்ற திட்டத்தின் கீழ் சீனா அனுப்பியுள்ளது. வரும் 10ஆம் தேதி வாக்கில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையிவ் தியான்வென்-1 நுழைகிறது.

அதன் பிறகு லேண்டர் மற்றும் ரோவரை செவ்வாயின் தரையில் இறக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஒரே பயணத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் மூன்றையும் செவ்வாயில் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனை முயற்சியாக தியான்வென்-1 திட்டத்தை சீனா முன்னெடுத்துள்ளது.

சுமார் 40 கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து இந்த 3 கருவிகளும் செவ்வாயில் இருந்து அனுப்பும் சிக்னல்களை பெறுவதற்காக, பூமியில் பிரம்மாண்ட ஆண்டெனாவையும் தயார்செய்துள்ளது சீனா. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments