ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணம் இழப்பு.. இளைஞர் தற்கொலை..!

சென்னை கொடுங்கையூரில் ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை கொடுங்கையூரில் ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
தியாகராஜன் என்ற அந்த இளைஞர், சொந்தமாக சலூன்கடை நடத்தி வந்துள்ளார். ஆன்லைனில் வரும் அனிமேஷன் கிரிக்கெட் விளையாட்டில் மூழ்கிய தியாகராஜன், நண்பர்கள், உறவினர்களிடம் 6 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். அதனை அடைப்பதற்காக அவரது பெற்றோர் வீட்டை அடமானம் வைத்துள்ளனர்.
ஆனால் மீண்டும் தனியார் நிதி நிறுவனத்தில் 5 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் தியாகராஜன் பணத்தை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தத் தொகை வட்டிக்கு மேல் வட்டி ஏறி 13 லட்ச ரூபாயில் வந்து நின்றிருக்கிறது. நிதி நிறுவனத்தின் நெருக்கடி அதிகமான நிலையில், தியாகராஜன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
Comments