தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம்

0 1415
தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம்

இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 தேஜஸ் இலகு ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.

பெங்களூருவில் இன்று சர்வதேச விமானக் கண்காட்சி தொடங்குகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். விமானப்படைக்கு 73 எம்கே 1 ஏ ரக தேஜஸ் போர் விமானங்களும் 10 எல்சிஏ தேஜஸ் எம்கே 1 ரக விமானங்களும் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், 83 விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தாகிறது.இந்த விமானங்கள் 2024ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் கூறியுள்ளார். 

இந்நிலையில், 3 நாட்கள் நடக்கும் சர்வதேச விமானக் கண்காட்சியில் உலகளாவிய விமான நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்டின், டசால்ட் மற்றும் ஏர்பஸ் தவிர, இந்த நிகழ்ச்சியில் தலேஸ், பிஏஇ சிஸ்டம்ஸ் மற்றும் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான MBDA நிறுவனமும் பங்கேற்றுள்ளது.

இந்த நிறுவனங்களுடன் ஈரான் உள்ளிட்ட 28 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். எலகங்கா என்ற இடத்தில் நடக்கும் இந்தக் கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்த சாரங்க் ஹெலிகாப்டர்கள், சூரியகிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், எல்சிஎச், எல்யூஎச், ஜாக்குவார், ஹாக், பைட்டர் ஜெட், ஏர்கிராப்ட் ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்கின்றன. இதற்காக கடந்த சில தினங்களாக இந்த விமானங்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments