மதுரையில் 80 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

0 50404

துரையில் 80 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை புனரமைக்கும் பணியின்போது பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம்போக்கி தெருவில் வாசுதேவன் என்பவருக்குச் சொந்தமான அந்தக் கட்டிடம் இரண்டு அடுக்குகளை கொண்டிருந்தது. அதன் மேற்கூரையை மட்டும் இடித்துவிட்டு, புதிதாக செண்ட்டிரிங் போடும் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

6 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சந்திரன், ராமர், ஜெயராமன் என்ற 3 தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

மற்ற மூவரும் காயங்களுடன் தப்பினர். 80 ஆண்டுகள் பழமையான பக்கவாட்டுச் சுவரின் திடத்தன்மையை முறையாக ஆய்வு செய்யாததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வாசுதேவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments