இரட்டை படுகொலை வழக்கு - ஓசூர் பிரபல தொழிலதிபர் ஜே.ஆர் பெங்களூருவில் வைத்து கைது

0 5928
ஓசூர் அருகே, தொழில்போட்டி காரணமாக, பெண் தொழிலதிபரையும், அவரது கார் ஓட்டுநரையும், கூலிப்படை வைத்து, எரித்துக் கொன்ற, பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஓசூர் அருகே, தொழில்போட்டி காரணமாக, பெண் தொழிலதிபரையும், அவரது கார் ஓட்டுநரையும், கூலிப்படை வைத்து, எரித்துக் கொன்ற, பிரபல தொழிலதிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த நீலிம்மா என்பவர், நாயக்கனப்பள்ளி பகுதியில், அட்டைப் பெட்டி தயாரிப்பு கம்பெனி நடத்தி வந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கம்பெனியிலிருந்து, தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

சானமாவு பகுதியில், டாரஸ் லாரி மூலம் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கூலிப்படையினர், நீலிம்மாவையும், அவரது ஓட்டுநரையும் எரித்துக் கொன்றனர்.

விசாரணை நடத்திய உத்தனப்பள்ளி போலீசார், கூலிப்படையினர் 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூலிப்படையை ஏவி, இரட்டைப் படுகொலையை அரங்கேற்றி தலைமறைவான பிரபல தொழிலதிபர் ஜே.ஆர் என்ற ஜே.ராமமூர்த்தியை, பெங்களூரு சாந்தபுரம் பகுதியில் வைத்து, போலீசார், தற்போது, கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments