இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம்..! திருமணமான தகவலை வெளியிட்டது சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம்..! திருமணமான தகவலை வெளியிட்டது சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி
இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கு திருமணம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜய் சங்கருக்கும், வைஷாலி விஸ்வேஸ்வரன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் விஜய் சங்கருக்கு திருமணமான தகவலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில் இந்த சிறப்பு வாய்ந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையட்டும் என வாழ்த்தியுள்ளது.
Comments