டெல்லியில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி : டிராக்டர்களுடன் தலைநகரை நோக்கித் திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்

டெல்லியில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி : டிராக்டர்களுடன் தலைநகரை நோக்கித் திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்
டெல்லியில் விவசாயிகள் நாளை டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து டெல்லி ஹரியானா எல்லைப்பகுதிகளில் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெறும் வரை விவசாயிகள் டெல்லிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதன்பிறகு சிங்கூர், காசிபுர் ,திக்ரி ஆகிய மூன்று வழித்தடங்களில் டிராக்டர் பேரணியாக டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியை நோக்கி டிராக்டர்களுடன் திரண்டு வருகின்றனர்.
சுமார் 100 கிலோமீட்டர் துரத்திற்கு மூன்று சுற்றுவட்டப்பாதைகளில் இப்பேரணி டெல்லியை அடைய உள்ளது. விவசாயிகள் பேரணியை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Comments