ஜல்லிக்கட்டை ஒன்றாக கண்டுகளித்த ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின்

0 3716
ஜல்லிக்கட்டை ஒன்றாக கண்டுகளித்த ராகுல்காந்தி, உதயநிதி ஸ்டாலின்

தமிழக மக்களையும் அவர்களது மொழி, பண்பாட்டையும் நசுக்க நினைப்பவர்களுக்கு, அது முடியாது என்பதை உணர்த்தவே அவனியாபுரம் வந்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நேரில் காண்பதற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். வெற்றிபெற்றவர்களுக்கு 40 தங்க மோதிரம், 25 தங்க காசு உள்ளிட்ட பரிசுகளை அவர் வழங்கினார்.

பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காணவந்த ராகுல்காந்தியும், உதயநிதி ஸ்டாலினும் உரையாடியபடியே போட்டிகளை கண்டு ரசித்தனர். புறப்படுவதற்கு முன்னர் மைக்கில் பேசிய ராகுல்காந்தி, தமிழர்களின் பாரம்பரிய விழாவை நேரில் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி  என்றார். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த அவர், தமிழர்களின் மொழி, வரலாறு, பண்பாட்டை கட்டிக் காப்பவர்கள் பக்கம், தான் நிற்பேன் என உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments